தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த ரவுடி அருண்குமார்(37) என்பவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று மதுபானக் கடைகள் திறந்ததால் அவர், தனது நண்பர்களான கட்டையன் (எ) கதிர்வேல், முத்து, பிச்சாண்டி ஆகியோருடன் அதே பகுதியில் பூமால்ராவுத்தன் கோயில் தெருவில் உள்ள கட்டையன் வீட்டில் மது அருந்தியுள்ளனர்.
நள்ளிரவில், போதையில் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர், அவரது நண்பர்கள் மூவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.