தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர் காவலில் பணியாற்றிய சச்சின் மோப்ப நாய் உயிரிழப்பு.. 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்! - தஞ்சாவூர் எஸ்பி

Thanjavur Police sniffer dog Sachin died: தஞ்சாவூர் மாவட்ட காவலில் பணியாற்றிய சச்சின் மோப்ப நாய் உடல் நலக்குறைவால் இறந்ததைத் தொடர்ந்து, நேற்று(ஜன.6) தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவு அலுவலக வளாகத்திற்குள் 12 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Thanjavur Police sniffer dog Sachin died
தஞ்சாவூர் காவலில் பணியாற்றிய சச்சின் மோப்ப நாய் உயிரிழப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 12:57 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டக் காவலில் மோப்ப நாய்கள் பிரிவில் 5 நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் பிரதமர், முதலமைச்சர், ஆளுநர் வருகையின்போது மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 11 ஆண்டுகளாக சச்சின் என்கிற மோப்ப நாய், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தடயங்களைக் கண்டறிவதற்கு காவல் துறைக்கு உதவியாக இருந்து வந்துள்ளது.

மேலும், வெடிகுண்டு கண்டறிதலில் நன்கு பயிற்சி பெற்ற சச்சின் என்ற மோப்ப நாய், துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மோப்ப நாய்க்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மோப்பநாய் பிரிவில், சக நாய்களுடன் வளர்ந்து வந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இந்த மோப்பநாய் நேற்று முன்தினம் இறந்தது.

இவ்வாறு இறந்த சச்சின் மோப்ப நாய் உடல், தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவு அலுவலக வளாகத்திற்குள் நேற்று (ஜன.6) அடக்கம் செய்யப்பட்டது. சச்சின் மோப்ப நாய் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மாவட்ட காவல் எஸ்.பி ஆஷிஷ் ராவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பொதுவாக, மோப்ப நாய்கள் பணியின்போது இறந்தால் மட்டுமே அரசு மரியாதை வழங்கப்படும். ஆனால், சச்சின் மோப்ப நாய் பணியில் சிறந்து விளங்கியதால், மாவட்டக் காவல் எஸ்.பி ஆஷிஷ் ராவத் விருப்பத்திற்கிணங்க, சச்சின் மோப்ப நாய் உடல் அடக்கத்தின்போது 12 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. மேலும், மோப்பநாய் சச்சின் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களும் அதனுடன் வைக்கப்பட்டன.

இதையும் படிங்க:நீலகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் 3 வயது சிறுமி உயிரிழப்பு..!

ABOUT THE AUTHOR

...view details