தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்றில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு: காவல் துறை விசாரணை! - திருக்காட்டுப்பள்ளி அருகே ஆற்றில் புதைந்திருந்த பெண்ணின் சடலம் மீட்பு

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் புதைந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு
ஆற்றில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு

By

Published : Nov 10, 2020, 10:44 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேவுள்ள கொள்ளிடம் ஆற்றில் புதைந்து கிடந்த உடலைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜிடம் தெரியப்படுத்தினர் .

இதையடுத்து, அவர் தோகூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் அருணகிரி, டிஎஸ்பி சித்திரவேல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதேவி உள்ளிட்ட காவல் துறையினர் ஆற்றில் புதைந்து கிடந்த உடலை தோண்டி எடுத்தனர்.

அப்போது, ஆற்றில் கிடந்த உடல் நிர்வாணமான நிலையில், 25 முதல் 27 வயதுடைய பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்களை வரவழைத்த காவல் துறையினர், பெண்ணின் உடலை அங்கையே உடற்கூராய்வு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆற்றில் நிர்வாண நிலையில் கிடந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இரண்டு நாள்களுக்கு முன்பு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details