தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கில் வெளியே வந்த 57 நபர்கள் மீது வழக்குப்பதிவு - மாவட்ட காவல்துறை தகவல் - Thanjavur Police beat up in curfew

தஞ்சாவூர்: ஊரடங்கில் வெளியே வந்த 57 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

57 நபர்கள் மீது வழக்குப்பதிவு
57 நபர்கள் மீது வழக்குப்பதிவு

By

Published : Mar 25, 2020, 11:05 PM IST

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தஞ்சாவூர் நகர பகுதிகளில் அனுமதியின்றி வெளியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.

அப்போது முகக் கவசம் அணியாமல் பாதுகாப்பற்று வந்தவர்களிடம் முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தினர்.

57 நபர்கள் மீது வழக்குப்பதிவு

அதேபோல் நகர்ப்புறத்தில் சுற்றி உள்ள சாலைகளில் பேரிகார்டு கொண்டு வாகனங்கள் செல்ல முடியாதவாறு தடை ஏற்படுத்தினர். அந்த தடையையும் மீறி வந்த 57 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதில் 9 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: விருதுநகரில் 100 விழுக்காடு கடைகள் அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details