தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆனி மாத பிரதோஷ வழிபாடு: பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்! - ஆனி மாத பிரதோஷம்

தஞ்சாவூரில் ஆனி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆனி மாத பிரதோஷ வழிப்பாடு
ஆனி மாத பிரதோஷ வழிப்பாடு

By

Published : Jul 8, 2021, 9:14 AM IST

தஞ்சாவூர்:உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும்.

ஆனி மாதத்தின் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், எலுமிச்சை சாறு, திரவியப்பொடி உள்ளிட்ட ஒன்பது வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், மகா தீபாராதனை காட்டப்பட்டது. கரோனா பரவல் காரணமாக கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 80 நாள்களுக்குப் பிறகு ஜூலை 5ஆம் தேதி முதல் கோயிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனி மாத பிரதோஷ வழிப்பாடு

இதனையடுத்து, நேற்று (ஜூலை 07) நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில், பக்தர்கள் தகுந்த இடைவெளியுடன் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: கால வரலாற்றை காட்டும் முக்கிய ஆவணங்கள்: பழமையான அரிகண்ட கல் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details