தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக விரோதிகள் அட்டகாசம்: பாலத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை - பட்டுக்கோட்டை

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே உள்ள பாலடைந்த பழைய பாலத்தை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

bridge

By

Published : May 25, 2019, 7:24 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாற்று பாலம் பழுதடைந்த நிலையில், அதற்கு பதிலாக அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், பழைய பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூகவிரோதிகள் சிலர், அதன் அருகே அமர்ந்து மது குடிப்பதும், முகாமிட்டு அட்டகாசம் செய்வதுமாக இருந்து வருகின்றனர்.

பழைய பாலத்தை அகற்றிட கோரிக்கை

இதையடுத்து, அந்த பாலத்தை அப்பகுதியில் இருந்து முழுவதுமாக அகற்றிட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details