தஞ்சாவூர்: திருவிடைமருதூர் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). விவசாயியான இவர் கடந்த ஜூன் மாதம் ஆடுதுறையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் என்னும் தனியார் நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று (மே 8) மாலை கோபாலகிருஷ்ணன் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்திற்கு நகையை மீட்க சென்றுள்ளார். அதற்கு வட்டியாக 40,000 ரூபாய் கட்ட வேண்டும் என நிதி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கூறியுள்ளனர்.
அப்போது, கோபாலகிருஷ்ணன் அதிக வட்டி வசூலிப்பதாக கூறி நிதி நிறுவனத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தன் கையில் கொண்டு சென்ற மண்ணெண்ணையை நிதி நிறுவனத்திற்குள் ஊற்றி தீவைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் பதற்றமடைந்த நிதி நிறுவன நிர்வாகி மணிகண்டன், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திருவிடைமருதூர் காவல் நிலையத்தார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கோபாலகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்யலாம்!