தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை திம்மக்குடி மணவேளி தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் எட்டு ஆண்டுக்கு முன்பாக சுபஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் அபிஷேக்(5) இருந்தார். இந்நிலையில் சுபஸ்ரீ கடந்த 2 மாத காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறபடுகிறது. இதனால், மே.11 ஆம் தேதி சுபஸ்ரீ துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூரில் தாய், மகன் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக கணவர் புகார்! - thanjavur
தஞ்சாவூர்: சுவாமிமலையில் 5 வயது மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![தஞ்சாவூரில் தாய், மகன் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக கணவர் புகார்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3271474-thumbnail-3x2-suicide.jpg)
சிறிது நேரத்தில் சிறுவன் அபிஷேக், வயிற்றுவலியால் துடித்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விஷமருந்தியதால் அபிஷேக் இறந்துள்ளார் என்று மருத்துவர்கள் கார்த்திக்கிடம் தெரிவித்தனர். இதைக்கேட்ட அதிர்ந்துபோன கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தை இறப்பில் மர்மம் இருப்பதாக சுவாமிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், விஷம் குடித்துவிட்டு சுபஸ்ரீ துாக்கிட்டு தற்கொலை கொண்டாரா அல்லது உறவினர்கள் யாராவது விஷம் கொடுத்துள்ளனரா என பல்வேறு கோணத்தில் சுவாமிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் மனைவி மற்றும் மகனை இழந்து தவிக்கும் கார்த்திக்கிற்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.