தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறான பெயரில் வழக்குப்பதிவு - இணையத்தில் இருந்து மனுதாரரின் பெயரை நீக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு - thanjavur district news

tnpolice.gov.in இணையதளத்தில், குறிப்பிட்ட வழக்கில் என்னுடைய பெயரை நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில், மனுதாரரின் பெயரை, tnpolice.gov.in இணையதளத்தில் இருந்து 2 வாரத்தில் நீக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை
madurai high court

By

Published : Jul 6, 2023, 5:14 PM IST

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம், தோகூர், பாத்திரக்குடியைச் சேர்ந்தவர், ஹரிகரன். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், ''என் மேல் 20.02.2018 அன்று தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தோகூர் காவல் நிலையத்தில் உண்மைத் தன்மையின் தவறை உணர்ந்து எனது பெயர் திருவையாறு நடுவர் நீதிமன்றத்தின் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில் நான் காவலர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆனால், எனது காவலர் பணி தொடர்பாக நான் விண்ணப்பித்திருந்த நிலையில் http://www.eservices.tnpolice.gov.in என்கிற வலைதளத்தில் எனது நன்னடத்தை சான்றிதழ், பதிவிறக்கம் செய்யப்பட்ட பொழுது, என் மீது தஞ்சாவூர் தோகூர் காவல் நிலையத்தில் வழக்கு எண்: 17/2018-ன் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளதாக காண்பிக்கிறது.

இதையும் படிங்க:MP Senthil Kumar: இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தருமபுரி எம்.பி!

எனது பெயரை நீக்கி இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின்பும்; இவ்வாறு போலீஸ் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட்டில் தவறுதலாக, என் மீது வழக்கு உள்ளதாக வந்து உள்ளது. Tnpolice இணையதளத்தில், உடனடியாக நீக்கம் செய்யவில்லை. இதனால் நான் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளேன்.

எனவே, தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் காவல் நிலையத்தில் என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (வழக்கு எண் : 17/2018) தொடர்பாக http://www.eservices.tnpolice.gov.in என்கிற வலைதளத்தில் என்னுடைய பெயரை நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி உத்தரவில், ''குற்ற வழக்குகளில் இருந்து அனைத்து ஆவணங்களிலும் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட பின்பும் அவரது பெயரை ஏன் tnpolice.gov.in என்ற இணையதளத்தில் இருந்து நீக்கவில்லை. இது ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வாதார உரிமை, எனவே எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல், உடனுக்குடன் பெயர்களை இணையத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறி மனுதாரரின் பெயரை, tnpolice.gov.in வழக்குப் பதிவு உள்ளது என்ற நிலையை நீக்க உத்தரவிட்டு இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:திமுகவிடம் சட்ட ரீதியாக மோதியவர்கள் யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை - டென்ஷனான ஆர்.எஸ்.பாரதி

ABOUT THE AUTHOR

...view details