தமிழ்நாட்டில் இதுவரை மூன்று லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் இன்று (ஆக. 16) 194 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சையில் ஒரே நாளில் 124 பேருக்கு கரோனா - Thanjavur Latest News
தஞ்சாவூர் : நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஆக.16) ஒரே நாளில் 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Thanjavur Latest Corona Update
இதுவரை நான்காயிரத்து 888 பேருக்கு அம்மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து ஏழு பேர் தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர்.