மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடெங்கும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் என்ஆர்சி, சிஏஏ ஆகிய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமியர்களின் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றது. அப்போது, மேலவஸ்தாவடியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் இந்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.