தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் வாக்களிக்கத் தடை - thanjavur admk ward cadidate

தஞ்சாவூர்: உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் வாக்களிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

thanjavur-indirect-election-admk-candidate-restricted-for-indirect-election
மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் வாக்களிக்க தடை

By

Published : Jan 10, 2020, 10:08 AM IST

தஞ்சாவூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் 15ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் வினுபாலன். இவரது வெற்றியில் சந்தேகம் இருப்பதாக் கூறி திமுக வேட்பாளர் பொன்னுச்சாமி சார்பில் அவரது வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்குவந்த நிலையில், வருகின்ற 11ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலில் பங்கேற்று வாக்களிக்க தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றம்

இதையும் படியுங்க:கயத்தார் ஒன்றியத்தில் மறு வாக்கு எண்ணிக்கை..!

ABOUT THE AUTHOR

...view details