தஞ்சாவூரில் மாவட்டம் அரசு போக்குவரத்துக் கழகம் முன்பு, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏஐடியூசி துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட நிர்வாகி குணசேகரன், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.