நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், கரோனாவிற்கு பாதுகாப்புடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதி தேவைப்படுவதால், தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி, 100 படுக்கைகளுடன் கரோனாவிற்கான தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுவருகிறது.
கரோனா வார்டாக மாறிய அரசு பொறியியல் கல்லூரியில் திடீர் ஆய்வு! - கரோனா வார்டாக மாறிய அரசு பொறியியல் கல்லூரியில் திடீர் ஆய்வு
தஞ்சாவூர்: கரோனா வார்டாக மாறிய அரசு பொறியியல் கல்லூரியை பூதலூர் தாசில்தார் ஆய்வு செய்தார்.
Thanjavur government engineering college change Corona 19ward thasildar search
இந்த கல்லூரியிலுள்ள, 98 அறைகளும் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்ட அறைகளாக மாற்றப்படுகின்றன. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வசதிக்காக, கட்டில்கள், மெத்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதனை, பூதலூர் தாசில்தார் சிவக்குமார் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் புலிக்கு கரோனா தொற்று!