தஞ்சை மாவட்ட அதிராம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக இடைவிடாது காற்றுடன் சேர்ந்து கனமழையும் பெய்து வருகிறது.
இதனால் விசைப்படகுகள் மட்டும் கடலுக்குச் சென்று வரும் நிலையில் பெரும்பாலான நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை மேலும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றாலும் மழையின் காரணமாக படகை தொடர்ந்து செலுத்தவும் மீன்பிடிக்க முடியாமலும் கரைக்குத் திரும்புவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்மழையால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மீனவர்களின் நலன் கருதி தமிழக அரசு மழைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கிவருகிறது என்றும் ஆனால் இரண்டு மாதகாலம் மீன்பிடிக்கச் செல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது வழங்கப்படும் ஐந்தாயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை என்பதால் மழைக்கால நிவாரணத் தொகையை கூடுதலாக உயர்த்தி வழங்கவேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம் கடற்கரைப் பகுதி இதையும் படிங்க:'மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!' - மீன்வளத் துறை எச்சரிக்கை