தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடுகளைக் காலி செய்ய வனத் துறை நோட்டீஸ்: 'மயானம்தான் போகணும்...!' - மீனவர்கள் கண்ணீர்

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே மூன்று தலைமுறையாக வாழ்ந்துவரும் மீனவர்களை வனத் துறையினர் வீடுகளைக் காலி செய்யச் சொல்லியதால் அவர்கள் எங்கு செல்வதென்று தெரியாமல் கவலையுடன் உள்ளனர்.

fishermen

By

Published : Oct 19, 2019, 11:52 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவுக்கு உள்பட்ட பகுதி சம்பைபட்டினம் ராவத்தன்வயல். இங்குள்ள மக்கள் மீன்பிடித் தொழிலையே பிரதானமாக நம்பி வாழ்க்கை நடத்திவருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மீன்பிடித் தொழிலில் வருமானம் இல்லாவிட்டாலும் ஏழ்மை நிலையில்தான் வாழ்ந்துவருகின்றனர்.

வாழ்வா சாவா நிலையில் இருக்கும் மீனவர்கள்

இங்கு வசிக்கும் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் இவர்கள் குடியிருப்பதற்காக குறிப்பிட்ட சிலருக்கு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்தப் பகுதி வனத் துறைக்கு சொந்தமான இடம் என்றும் இன்னும் 15 தினங்களில் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் எனக் கோரி இங்குள்ள 15 வீடுகளில் வனத் துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், "இங்கு மூன்று தலைமுறைகளாக, கிட்டத்தட்ட 100 ஆண்டாக இதே இடத்தில் வசித்து வருகிறோம். வீட்டு வரி, நில வரி ஆகியவை முறையாகக் கட்டிவருகிறோம். இப்படி இருக்கையில் எங்களைக் காலி செய்யச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்.

எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. இதற்கு மேல் எங்களை வீட்டை காலி செய்யச் சொன்னால் ஒன்று நாங்கள் மயானத்தில் குடியேற வேண்டியிருக்கும். இல்லையென்றால் தீக்குளித்து தற்கொலை செய்ய வேண்டியிருக்கும்" என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details