தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் போராட்டம் - டெல்லி சென்ற தஞ்சை விவசாயிகள் - etv bharat

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் ரயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

தஞ்சை விவசாயிகள் டெல்லி பயணம்
தஞ்சை விவசாயிகள் டெல்லி பயணம்

By

Published : Aug 3, 2021, 7:26 PM IST

தஞ்சாவூர்: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களாக டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் இன்று (ஆக. 3) சோழன் விரைவு ரயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அதற்கு முன்னதாக தஞ்சை ரயில் நிலைய வளாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

தஞ்சை விவசாயிகள் டெல்லி பயணம்

எனவே உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details