தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து சமுதாய பிரதிநிதிகளுக்கான விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், “கரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்த நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமையாக பணி செய்து வருகிறார்கள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்களும் மருத்துவர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் 99 விழுக்காட்டினர் அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளித்துவரும் நிலையில், ஒரு சிலர் இந்த இக்கட்டான நேரத்திலும் மத ரீதியிலான கருத்து வேறுபாடுகளைக் கொண்டு மக்களிடையே உள்ள ஒற்றுமைகளைச் சிதைக்க முயல்கின்றனர்.