உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 48 பஞ்சாயத்துகள், 21 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், ஒரு லட்சத்து ஏழாயிரத்து 256 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 114 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்.
இதேபோன்று, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 222 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 208 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 22ஆயிரத்து 671 பெண் வாக்களர்கள், இரண்டு மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் 176 வாக்குச்சாவடிகளில், 40,165 ஆண் வாக்காளர்கள், 40,165 பெண் வாக்காளர்கள், இரண்டு மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 80,451 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.