தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூரில் அதிகரிக்கும் கரோனா: 7,450 பேர்‌ பாதிப்பு! - Thanjavur corona virus issue

தஞ்சாவூர்: நேற்று மட்டும் 150 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது

Thank
Thanj

By

Published : Sep 7, 2020, 9:56 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகளவில் உள்ளது‌. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் ஐந்தாயிரத்தை தாண்டுகிறது. தீநுண்மி தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 150 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், 175 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 973 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details