தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்யும்போது, எதிர்பாராமல் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த, பொதுப்பயிர் காப்பீட்டு நிறுவனம் ஒன்று நடப்பு ஆண்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு நெல் பயிருக்கு காப்பீடு செய்திட, தஞ்சாவூர் மாவட்டத்தில் 873 வருவாய் கிராமங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில், தங்களது விருப்பத்தின்பேரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.