தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக நன்மை வேண்டி தஞ்சைப் பெரியகோயிலில் திசா ஹோமம்!

தஞ்சை: உலக நன்மை வேண்டி தஞ்சைப் பெரியகோயிலில் நேற்று திசா ஹோமம், சாந்தி ஹோமம் நடைபெற்றது.

thanjavur big temple thisa homam  பெரிய கோயில் குடமுழுக்கு  பெரிய கோயில் குடமுழுக்கு ஹோமம்
தஞ்சைப் பெரிய கோயிலில் நடைபெற்ற திசா ஹோமம்

By

Published : Jan 30, 2020, 8:09 AM IST

தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதன்படி 27ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

நேற்று உலக மக்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டியும், கண்ணுக்குத் தெரியாத தோஷங்கள் நீங்கவும் திசா ஹோமம், சாந்தி ஹோமம் நடைபெற்றன. திசா ஹோமம் நடத்தப்பட்டு, அங்கிருந்த கலசங்களிலிருந்த நீரானது நான்கு திசைகளிலும் தெளிக்கப்பட்டது.

தஞ்சைப் பெரியகோயிலில் நடைபெற்ற திசா ஹோமம்

அதன்பிறகு சாந்தி ஹோமம் நடைபெற்ற இடத்திலிருந்த கலசநீரைக் கொண்டு பாலாலயம் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு திருமுழுக்கு செய்யப்பட்டது. இதில், திராளான பக்தர்கள் பங்கு பெற்று கடவுளை தரிசித்தனர்.

இதையும் படிங்க: அமைச்சர் கருப்பணனுக்கு ’டங் சிலிப்’ - சொல்கிறார் செல்லூரார்!

ABOUT THE AUTHOR

...view details