தமிழர்களின் கட்டடக் கலையை உலகுக்கு பறைசாற்றும் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று பாலாலய பூஜைகள் சன்னதியில் தொடங்கியது. வரும் இரண்டாம் தேதி வரை நடைபெறும் இந்த பூஜையை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மாதவன் தொடங்கிவைத்தார்.
குடமுழுக்கையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் பாலாலய பூஜைகள் தொடக்கம் - thanjavur big temple function
தஞ்சை: பெரிய கோயிலில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கையொட்டி முதற்கட்ட பாலாலய பூஜைகள் நேற்று தொடங்கியது.
குடமுழுக்கையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் பாலாலய பூஜைகள் தொடங்கியது
இரண்டாம் தேதி இந்த பூஜைகள் முடிவடைந்தவுடன் அன்று மாலை பெரிய கோயிலின் மூலவர் சன்னதி மூடப்பட்டு அதன்பிறகு மூலவர் சன்னதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. அந்த இடைபட்டக் காலத்தில் பொதுமக்கள் மூலவரை தரிசிக்க முடியாதென்றும் குடமுழுக்கு நடைபெற்ற பின்னரே மூலவரை தரிசிக்க முடியும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்புக்கு மதம் தடையில்லை - கோயில் யானை இறப்புக்கு மரியாதை செலுத்திய இஸ்லாமியர்!