சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரசின் தாக்கம் மற்ற நாடுகளிலும் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் 147 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துவருகிறது.
தமிழ்நாட்டில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப் போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் ஒருபகுதியாக, தஞ்சை பெருவுடையார் கோயிலில் தரிசனம்செய்ய அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இன்றிலிருந்து தரிசனத்திற்கு இடைக்காலத் தடையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்மையில், நடைபெற்று தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கை அடுத்து கோயிலில் தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்துவருகின்றனர்.