தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் வங்கியில் 37 கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பு - ரிசர்வ் வங்கி புகார்

தஞ்சாவூர்: கும்பகோணம், தஞ்சாவூரில் உள்ள மூன்று தனியார் வங்கிகளில் இருந்து 37 கள்ளநோட்டுகள் வந்துள்ளதாக குற்றவியல் பிரிவு காவல் துறையினரிடம் சென்னை ரிசர்வ் வங்கி புகார் அளித்தது.

fake money
fake money

By

Published : Dec 31, 2019, 9:22 AM IST

சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் சேனாதிபதி தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் மூன்று புகார் மனுக்களை அளித்தார். அதில், தஞ்சாவூரில் உள்ள இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஜூன் மாதத்தில் இருந்து பெறப்பட்ட ரொக்கப் பணத்தில் மூன்று கள்ள நோட்டுகள் இருந்தன.

இதைத் தொடர்ந்து, கும்பகோணம் தனியார் வங்கியில் இருந்து வந்த ரொக்கப் பணத்தில் 28 கள்ள நோட்டுகள் இருந்தன. அதன்பின், ஆகஸ்ட் மாதம் கும்பகோணம் தனியார் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரொக்கப் பணத்தில் ஆறு கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.இவை 100, 500 ரூபாய் நோட்டுகள். இவ்வாறு அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தஞ்சை மாவட்ட குற்றவியல் காவல் துறையினர் மூன்று வழக்குகள் பதிவு செய்து கள்ள நோட்டுகள் வங்கிக்கு எப்படி வந்தது? யார் மூலம் வந்தது? என சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

ரூ. 22 லட்சம் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details