தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி - தஞ்சாவூர்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பம்பு செட்டில் குளித்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

By

Published : Apr 30, 2019, 11:32 PM IST

கும்பகோணத்தை அடுத்த மேலமருத்துவகுடி பகுதியில் தெலுங்கு தெருவைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சக்திவேல் (18).

இவர், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அதேபகுதியைச் சேர்ந்த விக்னேஷ், கணேஷ் பிரபு ஆகியோருடன் வெளியில் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

பின்னர், துரௌபதி அம்மன் கோயில் பின்புறம் அமைந்துள்ள பம்புசெட்டு அருகே, அரை நிர்வாணமாக கிடந்துள்ளார் கிடைத்துள்ளார். இதைப்பார்த்த கிராம மக்கள், திருநீலக்குடி காவல் துறையினருக்குத் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சக்திவேலின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதில், சக்திவேல் மின்சாரம் தாக்கி இறந்ததாக கண்டறியப்பட்டது.

ஆனால், அதனை ஏற்க மறுத்த சக்திவேலின் தந்தை, வினேஷும், கணேஷும்தான் சக்திவேலைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details