பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய அளவில் தஞ்சை மாணவர்கள் சாதனை! - thanjai students won
தஞ்சை: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகுப் பந்து போட்டியில், பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
அகில இந்திய இறகு பந்து போட்டியில் தஞ்சை மாணவர்கள் சாதனை
அதில் ஒற்றையர்,இரட்டையர் பிரிவுகளில், டயன் டோனிரிட்ஸ், அனிஸ்மேரி, அட்சயா, கிருஷ்ண சுந்தர் ஆகியோர் வெள்ளியும் - ஈசன், சச்சின் சரண், ஆகிய இருவரும் வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர். வெற்றிபெற்ற மாணவர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்களுக்கு பட்டுக்கோட்டை சேலஞ்சர் இறகுப் பந்து கழகத்தினர் பாராட்டு தெரிவித்து கவுரவித்தனர்.