தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிகள் தயாரித்த ஆசியாவிலேயே முதல் பலூன் செயற்கைக்கோள் - Maniyammaiyar chat

தஞ்சை: மாணவிகள் தயாரித்த ஆசியாவிலேயே முதல் பலூன் செயற்கைக் கோளுக்கு மணியம்மையார் சாட் என பெயரிடப்பட்டு வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. இந்தச் செயற்கைக்கோளை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவிகள் கூட்டு சேர்ந்து தயாரித்துள்ளனர்.

Balloon satellite

By

Published : Apr 21, 2019, 10:40 PM IST

Updated : Apr 21, 2019, 11:36 PM IST

தஞ்சை வல்லம் அருகே உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பல்வேறு பிரிவுகளில் படிக்கும் 15 மாணவிகள் இணைந்து எஸ்கேஐ என்.எஸ்.எல்.வி. 9 மணியம்மையார் சாட் என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.

இந்தச் செயற்கைக்கோள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் திறந்தவெளி மைதானத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவிகள் தயாரித்தஆசியாவிலேயேமுதல் பலூன் செயற்கைக்கோள் இதுதான். இந்தப் பல்கலைக்கழகத்தில் 15 மாணவிகள் சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சிபெற்று கூட்டு முயற்சியுடன் இந்தச் செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவில் பெருமை சேர்க்கும் வகையில் மணியம்மையார் சாட் என இந்த செயற்கைக்கோளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தச் செயற்கைக்கோள் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன், வான்வெளிக்கு 70 ஆயிரம் அடி வரை சென்று அங்குள்ள வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று பாராசூட் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 40 கிலோமீட்டர் சுற்று வட்டத்துக்குள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே மாணவிகள் தயாரித்த பலூன் செயற்கைக்கோள்

இந்தச் செயற்கைக்கோள் விண்ணை நோக்கி மேலே செல்லும்போது வளிமண்டலத்தின் வெப்பநிலை ஈரப்பதம் அங்குள்ள ஆய்வுகளின் தன்மை குறித்து கண்டறிய உள்ளது. 11.21 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட பலூன் செயற்கைக்கோள் விண்ணில் பறக்காமல் தரையில் இறங்கியது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் வான்வெளியில் பறக்கவிடப்பட்டது.

Last Updated : Apr 21, 2019, 11:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details