தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று (ஆக.11) ஒரே நாளில் 125 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் புதிதாக 125 பேருக்கு கரோனா - tn covid 19 deaths
தஞ்சாவூர்: நேற்று (ஆக.11) ஒரே நாளில் 125 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
hospital
மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 324 நபர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,317 பேர் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஆறு பேர் உயிரிழந்தனர், இதனால் மொத்த உயிரிழப்பு 55 ஆக அதிகரித்துள்ளது. 85 பேர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர்.
இதையும் படிங்க:ஒரே நாளில் 297 நபர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி