தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடமுழுக்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன - தஞ்சை பெரிய கோயில்

தஞ்சாவூர்: பெரிய கோயிலில் குடமுழுக்கை பாதுகாப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி கூறியுள்ளார்.

thanjai pragatheeswarar temple reforming works
thanjai pragatheeswarar temple reforming works

By

Published : Feb 1, 2020, 2:07 PM IST

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கிற்கான திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்டோங்ரே தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, பெரிய கோயில் குடமுழுக்கினையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த முறை யாக சாலை பூஜைகள் கோயிலுக்கு வெளியே நடைபெறுகிறது என்றார்.

பெரிய கோயில் குடமுழுக்கிற்கான திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி
நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் குடமுழுக்கு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன என்றார். குடமுழுக்கு நடைபெற இருப்பதையொட்டி, பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ், சமஸ்கிருதம் இரு மொழிகளிலும் குடமுழுக்கு: தஞ்சை பெரிய கோயில் வழக்கில் தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details