தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வேப்பங்குளத்தில் கிளியம்மாள் (85) என்னும் மூதாட்டி தனியாகவசித்து வந்துள்ளார். இவர் தன் வீட்டில் எப்போதும் நகை அணிந்து கொண்டிருப்பது வழக்கம். மேலும்வெளியிடங்களுக்கு செல்லும்போது அவரது வீட்டிடன் அருகில் வசிக்கும் பிரபாகரன் என்பவரின் மனைவி செல்வியை அழைத்துச் செல்வது வழக்கம்
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், மூதாட்டியின் நகைகளைத் தருமாறு கேட்டுள்ளார் செல்வி, ஆனால் கிளியம்மாள் தரமறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்வி, மூதாட்டியை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளார் அதில் பலத்தக்காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் .
அதன் பின், கிளியம்மாள் அணிந்திருந்த ஏழே கால் பவுன் நகைகளை செல்வி எடுத்து கொண்டு, மூதாட்டியின் உடலை சாக்கு பையில் கட்டி சாலையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து மதுக்கூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து செல்வியை கைது செய்தனர்.
தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றம் அதையடுத்து தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எழிலரசியிடம் வந்தது, விசாரணை முடிவில் தீர்ப்பளித்த நீதிபதி செல்விக்கு ஆயுள்தண்டனையையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படியுங்க:'ஊருக்குள் வந்தால் உன்னை வெட்டுவோம்' - தோல்வியடைந்த வேட்பாளரின் கணவர்!