தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் டெல்டா பகுதிகளில் 2019ஆம் ஆண்டைவிட இந்தாண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகப்படியாக வந்ததனால் ஒருபோக விவசாயம் மற்றும் சம்பா சாகுபடி விவசாயத்தை விவசாயிகள் மிகவும் சுறுசுறுப்புடன் செய்து வந்தனர்.
இதில் கடந்த சில தினங்களாக நெல் அறுவடை நேரத்திற்கு வந்துவிட்டதைத் தொடர்ந்து நெல் அறுக்கும் இயந்திரங்கள் கிடைக்காததால், விவசாயிகள் தட்டுத்தடுமாறி நிலையில், ஒருவழியாக தற்போது அறுவடை பணியை முடித்தனர்.
அதைத் தொடர்ந்து மெஷின் மூலம் நெல் அறுத்த பிறகு வைக்கோல்களை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்பெல்லாம் பணியாளர்கள் அதிகப்படியாக இருந்ததால் கையிலேயே அறுத்து அந்த வைக்கோல்களை கட்டி தலையில் தூக்கி வருவர்.