தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்காட்டுப்பள்ளியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கோரிக்கை! - thanjai traffic problem

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி முக்கிய சாலையில் தினம்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

people meets police
people meets police

By

Published : Aug 9, 2020, 3:22 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கடை வீதி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எப்போதும் வாகன நெரிசல் ஏற்படுவதுடன் இந்த நெரிசலில் சாலையை கடந்து செல்வது மிகவும் கடினமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கரோனா பாதிப்பு உள்ள நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் திருக்காட்டுப்பள்ளி பகுதிக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்லவும், விற்பனை செய்யவும் இங்கு வருகின்றனர். இதனால் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரி செய்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'ஊருவிட்டு ஊருவந்து கரோனா நோய பரப்பாதீங்க' - பாடல் மூலம் விழிப்புணர்வூட்டும் எஸ்ஐ

ABOUT THE AUTHOR

...view details