தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் இக்கோயிலில் நடைபெறும் ஆவணித் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இந்தியாவிலேயே முதன்முறை: தமிழ்நாட்டில் டிஜிட்டல் பிரசாதம் - டிஜிட்டல் பிரசாதம்
தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமாக வழங்க கருவி அமைக்கப்பட்டுள்ளது.
temple
இந்த நிலையில், கோவிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமாக வழங்க புதிய கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி நேர்த்திக்கடனாக உடைக்கப்படும் தேங்காய் தண்ணீரை சுத்திகரித்து பக்தர்களுக்கு வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.