தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் அழுகிய நிலையில் பூசாரியின் உடல்: தற்கொலையா என விசாரணை! - கோயில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டின் உள்ளே அழுகிய நிலையில், தூக்கில் தொங்கிய படி கிடந்த கோயில் பூசாரியின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.

தற்கொலை
தற்கொலை

By

Published : Jun 4, 2021, 1:15 AM IST

தஞ்சாவூர்: குடும்பப் பிரச்னைக் காரணமாக கோயில் பூசாரி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டுக்கோட்டை சுண்ணாம்புகார தெரு ஆற்றங்கரைக் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் கோயில் பூசாரி செல்வம் (35). இவருக்கு மீனா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக, கோயில் பூசாரி செல்வத்திற்கும், அவரது மனைவி மீனாவிற்கும் தகராறு ஏற்பட்ட காரணத்தினால், மீனா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செல்வம் பல முறை சமாதானம் செய்தும் மீனா வராததால் நேற்று முன்தினம் (ஜூன்.1) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களாக வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை காவல்துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, செல்வம் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து செல்வத்தின் உடலை மீட்ட காவல்துறையினர் அவர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் 'கே.ஜி.எஃப் ராக்கி'!

ABOUT THE AUTHOR

...view details