தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சேகரிக்கப்படும் கழிவுகள், வண்டிப்பேட்டை அருகிலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருன்றன.
இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூன்.18) மாலை, திடீரென குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீ மளமளவெனப் பரவி, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை ஏற்றி வரும் வாகனம் மீது பட்டு, வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது.