டெல்டா மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி, நேரடி நெல் சாகுபடி எனப் பயிரிடப்பட்டு வருகிறது. வயல்களில் அதிகளவில் தண்ணீர் தேங்குதல், பல்வேறு பூச்சிகள் தாக்குதல், ஊடு களை எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே மகசூல் எடுப்பதில் விவசாயிகள் கடும் சவாலை எதிர் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூச்சித் தாக்குதல், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், விவசாயத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ள ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவ - மாணவிகள் 80 பேர் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தனர்.
அவர்களுக்கு மையத்தின் இயக்குநர் முனைவர் அம்பேத்கர் நெற்பயிரில் ஏற்படும் நோய், பூச்சித் தாக்குதல்கள் அவற்றிலிருந்து எவ்வாறு நெற்பயிரைக் காப்பது, விவசாயத்தில் இருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார்.