தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியை திட்டியதால் விரக்தியில் மாணவி தற்கொலை முயற்சி! - Student commit sucide attempt

தஞ்சாவூர்: சக மாணவர்கள் முன்பு ஆசிரியை திட்டியதால் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

student

By

Published : Oct 18, 2019, 11:54 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் நல்லிச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான செல்வேந்திரன் மகள் நந்தகுமாரி. இவர் பாபநாசம், அய்யம்பேட்டையில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கம்போல் இன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை, அப்பள்ளி ஆசிரியை ஹாலிஸ் என்பவர் வகுப்பறையில் சக மாணவிகள் முன்பு திட்டி, அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நந்தகுமாரி பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவர் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க:போராட்டம் நடத்தும் மாணவர்களை மிரட்டும் கல்லூரி நிர்வாகம் - மாணவர்கள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details