தஞ்சாவூர் மாவட்டத்தின் கடற்பகுதிகளான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி பகுதிகளில் பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
தஞ்சை காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், 100க்கும் மேற்பட்ட துணை ஆய்வாளர்கள் என 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கடலோர சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் கடற்கரை பகுதிகளில் பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி! இதுதவிர கடலோர பாதுகாப்புக் குழு காவலர்களும் கடற்கரை மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு வெளியாட்கள் யாரேனும் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் சோதனை செய்தனர். இந்தச் சோதனை நிகழ்வுக்கு 'சாஹர் கவாட்ச்' என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்'- அதிரடி சுப்பிரமணியன் சுவாமி