தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்! - பாலியல் தொழில்

தஞ்சாவூர்: பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய நான்கு சொகுசு கார்கள், மூன்று இருசக்கர வாகனங்களை வல்லம் அனைத்து மகளிர் நிலைய காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

வாகனங்கள் பறிமுதல்
வாகனங்கள் பறிமுதல்

By

Published : Jun 8, 2020, 3:16 PM IST

தஞ்சாவூர்-திருச்சி புதிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி- சானூரபட்டி பிரிவு அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் அந்தோரா (27), ஜூன்1ஆம் தேதி நண்பகல் 1 மணியளவில் உடலில் காயங்களுடன் சாலையில் கிடந்தார்.
அந்தப் பெண்ணை மாதர் சங்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் காவலர்கள் நடத்திய விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் பிறந்தவர் என்பதும், பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வருவதுதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெங்களூருவில் உள்ள தனது சித்தி மகள் சாந்தா என்பவர் மூலம் ஒருவர் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு அழைத்துவந்து, தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டில் ‘வீட்டு வேலைக்கு’ எனக்கூறி சேர்த்துவிட்டதாகவும், ஆனால் அங்கே இருந்தவர்கள் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், தன்னை பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியதாலும் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதுடன் ஒரு வாகனத்தில் அழைத்துவந்து சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டதாகவும் அந்தோரா கூறினார்.
இதையடுத்து, தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன் உத்தரவின்பேரில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர். அந்தோரா கூறிய தகவல்கள் மற்றும் வாகனத்தின் நிறம் அடிப்படையில், அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்திவருபவர் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து செந்தில்குமார் அவரது மனைவி ராஜம் உள்ளிட்ட நான்கு பேர் மீது வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவர்கள் நால்வரையும் கைது செய்தனர்.
கைதான நான்கு பேரில் ஒருவரான பிரபாகரன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல்நிலையத்தில் பணிபுரிகையில் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் ஆவர்.
இந்நிலையில் விபசாரத்திற்கு பயன்படுத்தியதாக நான்கு சொகுசு கார்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details