தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மாதத்திற்கு பின்பு திறக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில்! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: கரோனா தடை உத்தரவுக்கு பிறகு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் இன்று காலை திறக்கப்பட்டது.

5 மாதத்திற்கு பின்பு திறக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில்
5 மாதத்திற்கு பின்பு திறக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில்

By

Published : Sep 1, 2020, 10:28 PM IST

தமிழ்நாடு அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் தஞ்சை பெரிய கோயில் ஐந்து மாதம் பிறகு பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று (செப்.1) திறக்கப்பட்டது.

இதனையடுத்து தஞ்சை பெரிய கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பத்து வயதிற்குள்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே உள்ளே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வரக்கூடிய பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மற்றும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து தகுந்த இடைவெளியை பின்பற்றி தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயிலுக்கு வருபவர்களின் பெயர், வயது மற்றும் ஊர் போன்றவற்றை பதிவு செய்து பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவோ, உணவு உண்ணவோ கோயில் நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

சாமி தரிசனம் செய்து உடனடியாக கோயிலிலிருந்து பக்தர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். ஐந்து மாதம் கழித்து பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்து வணங்கிச் செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details