தஞ்சாவூர்: வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோயில் கட்டட, சிற்பக் கலையைக் காண இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
தஞ்சையில் கரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கரோனா விதிகளை பின்பற்றாத கோயில் நிர்வாகம்
கரோனா தொற்று ஆரம்ப காலத்தில் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவை கடைபிடிக்கப்பட்டு வந்தன.
தற்போது நாளடைவில் எந்த கரோனா தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் கோயிலுக்குள் வலம் வருகின்றனர்.
இதனால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அலட்சியமாக செயல்படும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையம் வந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள்