மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விசைப் படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இறால் மொத்த வியாபாரிகள் ஜூன் 15ஆம் தேதிக்குப் பிறகு வியாபாரத்தைத் தொடங்க இருப்பதால், ஜூன் பத்தாம் தேதிக்குப் பிறகு மீன்பிடிக்கச் செல்லலாம் என்று முடிவெடுத்து தற்போது படகுகளைப் பராமரிக்கும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜுதீன் கூறும்போது, "மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்கியும் தஞ்சை மாவட்ட மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை எனவே அரசு மீனவர்கள் நலன் கருதி இறால் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேச வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புகையிலைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு வரவேற்பு!