தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த விவசாயிகள் கஜா புயலால் தஞ்சாவூர் பேரிடர் மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், பயிர்க் காப்பீட்டுத் தொகை என்பது 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முழுமையாக வழங்க உள்ளதாகவும், நிவாரணம் வழங்கக்கூடிய விவசாயிகளுக்கு மிகக் குறைந்த அளவே நிவாரணம் வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பேட்டி மேலும், பயிர்க் காப்பீட்டு தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் விவசாயிகளின் தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கு எடுத்துக்கொள்வதாகவும், தீபாவளி நேரத்தில் இதுபோல் செய்வதால் விவசாயிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் தவழ்ந்து வந்து வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையும் படிக்க: நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பால் கைபம்பிலிருந்து குடிநீர் வெளியேற்றம்!