தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வாரியத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம் - தமிழ்நாடு மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம்

தஞ்சாவூர் : திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

tanjore cpi protest against electric board
tanjore cpi protest against electric board

By

Published : Aug 20, 2020, 4:34 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி ஒன்றாவது வார்டு, புதுச்சத்திரம், ஐந்தாவது வார்டு உள்ளிட்ட சில பகுதிகளில் மின் அழுத்தக் குறைபாடுகள் நிலவி வருகிறது. இதனைப் போக்கி, புதிய உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்ம் அமைத்து, மின்சாரத்தை ஒழுங்குபடுத்தி தடையில்லா மின்சாரம் வழங்கிட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அலுவலர்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதி மக்களது கோரிக்கைகளை அலட்சியப்படுத்திய திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்தும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருக்காட்டுப்பள்ளி மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்குப் பகுதி பொறுப்பாளர் துரைராஜ், விவசாய சங்கத் தலைவர் பன்னீர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

பின்னர், போராட்டக்காரர்களை அழைத்துப் பேசிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) 15 நாள்களுக்குள் அவர்களது அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details