தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இன்று (ஆக. 12) ஒரே நாளில் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் ஒரே நாளில் 59 பேருக்கு கரோனா - கரோனா தொற்றின் பாதிப்பு
தஞ்சாவூர் : மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தொற்றிலிருந்து 195 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
![தஞ்சையில் ஒரே நாளில் 59 பேருக்கு கரோனா tanjore corona toll](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:47:07:1597241827-tn-tnj-02-corona-positive-vis-script-7204324-12082020193618-1208f-02715-127.jpg)
tanjore corona toll
மாநிலத்தில் இதுவரை மூன்று லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை நான்காயிரத்து 406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182ஆகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55ஆகவும் உள்ளது.