தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் நகை பறிக்கும் கும்பல்! சிசிடிவி பதிவுகள்... - தஞ்சாவூர் நகைக் கொள்ளை

சாலையில் நடந்து செல்லும் பெண்மணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் நகையை பறிக்க முயற்சி செய்யும்போது, அப்பெண் சுதாரித்து சத்தம் போட்டதால் தப்பிச் சென்ற இளைஞர்கள் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தஞ்சாவூர் நகைத் திருட்டு, தஞ்சாவூர் நகைக் கொள்ளை, tanjore chain snatching, chain snatching cctv video viral
தஞ்சாவூர் நகைத் திருட்டு

By

Published : Jan 10, 2020, 7:51 PM IST

தஞ்சாவூர்: இருச்சக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் நகை பறிக்கும் கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூர் முனிசிபல் காலனி ஏழாவது தெருவில் காலை 8 மணியளவில் பெண்மணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி வருவதற்கு முன்பே அவ்வழியாக இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், பெண்மணி தனியாக வருவதைக் கண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையைப் பறிக்க முயற்சி செய்தார்கள்.

மதுபோதையில் இளைஞர் பேச்சு: பொதுமக்கள் கும்மாங்குத்து

இதில், இருசக்கர வாகனத்தில் இருவர் வர, பின்னால் அமர்ந்து வந்த இளைஞர் இறங்கிச் சென்று அந்த பெண்மணியிடம் கழுத்தில் உள்ள தங்க நகையைப் பறிக்க முயன்ற போது அந்தப் பெண்மணி தடுத்து சத்தம் போட்டதும், இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் நகை பறிக்கும் கும்பல்! சிசிடிவி பதிவுகள்

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் நகையைப் பறிக்க முயற்சி செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details