தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - electric leakage accident news

தஞ்சாவூர்: தனியார் பேருந்து சாலையோர மின்கம்பியில் உரசிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்

By

Published : Jan 12, 2021, 2:42 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், கல்லணையில் இருந்து மன்னார்குடிக்கு சென்ற தனியார் பேருந்து, வரகூர் வழியாக செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசியது.

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வரகூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணராமன் (55), கருப்பூர் பகுதி கணேசன் (50), அரியலூர் நடராஜன் (45) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்தப் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நடுக்காவேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:சாலையோர நபர் மீது வேண்டுமென்றே ஆட்டோ ஏற்றிய ஓட்டுநர் - சிசிடிவி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details