உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் உலகப்பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்நிலையில்,கரோனா தொற்றால் அதிக கூட்டம் கூடக்கூடாது என்பதால் நாதஸ்வர,தவில் கலைஞர்கள்,பெரிய கோயில் ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், தஞ்சை சுற்றுலாத்துறை அலுவலர்கள் என 60 பேர் மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.