தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 117 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 952 நபர்கள் கரோனா தொற்று பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்றனர். இதில், தற்போது தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 450 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உள்ளது.
தஞ்சையில் கரோனாவால் 9 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழப்பு! - Tanjavur Corona death
தஞ்சாவூர்: கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒன்பது மாத கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில் 117 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tanjavur Latest Corona Update
இதில் ஒன்பது மாதம் நிரம்பிய கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தஞ்சாவூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.